தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.T.செந்தில்குமார், I.P.S., அவர்கள் தலைமையில் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.E.S.உமா, I.P.S., அவர்களின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், B.com..,BL., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.N.பாலசுப்பிரமணியன், தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24.08.2024 அன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள், தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது, ஒழிப்பது சம்பந்தமாகவும், சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், விநாயகர் சதுர்த்தியின்போது, சிலைகள் வைப்பது மற்றும் கரைப்பது சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவில் இறுதி அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புவது தொடர்பாகவும், பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பது சம்பந்தமாகவும் அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள், இன்று 24.08.2024 ஆம் தேதி காலை 06.30 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார். மேலும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.