மதுரை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 202 பெண்கள் 49 ஆண்கள் மொத்தம் 251 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வான 251 நபர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் இன்று (08.03.2022) மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து தமிழக அரசு வழங்கிய பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்கள்.
மேலும் அவர்களுக்கு தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி