சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறைக்கு தனியாக போக்குவரத்து காவல் நிலையம் இல்லாததால் மானாமதுரை சிப்காட் காவல் நிலையம் அருகே ரூபாய்.42 லட்சம் செலவில் சொந்தமாக புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் 19.02.2020 அன்று வானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முரளிதரன் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் திரு.சிவசங்கர நாராயணன் ஆகியோர் கட்டிட வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக போக்குவரத்து கட்டிடத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்