அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் RTO அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட உள்ள கீழப்பழுவூர் காவல்நிலைய கட்டிடத்திற்கு 16/09/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
உடன் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேஸ்வரன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.