சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரியலூர் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டணங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளுக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. ஏ கே விஸ்வநாதன் ஐபிஎஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை காவல் துறை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் உடனிருந்தனர்.