இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் S.P.பட்டினம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டது.