விருதுநகர் : சிவகாசி உட்கோட்டம் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் சுமார் 18 இலட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்களின் மெச்ச தகுந்த பணியினை பாராட்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ. கா.ப. அவர்கள் பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.