தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜோதி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜோதி நகர் 4வது தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சுமார் 35 மூட்டைகளில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த தங்க மாரியப்பன் மற்றும் சிந்தாமணி நகரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.