ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாரூர் அணை அரசு மங்கலம் தாலுகா குள்ளமடை கிறிஸ்துவ ஆலயம் அருகில் ஆர் .எஸ் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் சார்பு ஆய்வாளர், விஷ்ணுவரதன் உள்ளிட்டவர் காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது காலை 5 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கைப்பற்றி அதை கடத்தி வந்த R.S மங்கலம், கோழியார்கோட்டை, மாரிகிருஷ்ணன் மகன் சித்திரவேல், மற்றும் R.S மங்கலம் புல்லமடை மேற்கு தெரு,சுப்பையா மகன் ராஜ்குமார் இருவரையும் கைது செய்ய போலிசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி