ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் காவல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த், கொடுகள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோம்சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு. அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.