இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்கராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது கிடைத்த இரகசிய தகவலின் படி சபரிராஜா மற்றும் முத்துசெல்வம் ஆகியோரை விசாரிக்கையில் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து சபரிராஜா மற்றும் முத்துசெல்வம் ஆகியோர் மீது ஆய்வாளர் திரு.தங்கராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 687 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 7,66,000/- பணத்தை பறிமுதல் செய்தனர்.