பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி புண்ணியவாலன்புரம் பகுதியிலுள்ள, லெப்பை குடியிருப்பைச் சேர்ந்த முத்துராஜா 34 என்பவரது பெட்டிக் கடையை தீவிர சோதனை செய்தபோது.
அங்கு சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய அரசால் தடைசெய்யப்பட்ட 1852 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தார். பின் உதவி ஆய்வாளர் அவர்கள் முத்துராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ₹ 32 ஆயிரத்து 610 ஆகும்.