தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார், சிறப்பு உதவியாளர்கள் திரு. சுப்பாராவ், திரு. ராஜ்மோகன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. சுப்புராஜ் ஆகியோர் அடங்கிய போலீசார் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை to அத்திப்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கழுகுமலை ஆறுமுகநகரை சேர்ந்த தேவராஜ் மகன் சில்வியன் (47) தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பார்த்திபன் (27), மற்றும் கழுகுமலை அண்ணா புது தெருவை சேர்ந்த பழனி மகன் சுரேஷ் கண்ணன் (28) ஆகியோர் சேர்ந்து சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளிகள் சில்வியன், பார்த்திபன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 8.064/- மதிப்புள்ள 504 புகையிலை பாக்கெட்டுகள், ரூபாய் 32.000/- பணம், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.