தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (15.09.2021) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. காசிலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது.
விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கணிராஜ் மகன் ஜெயராஜ் 45. என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 37,000/- மதிப்பிலான 1,354 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
இது தவிர தூத்துக்குடி மத்தியபாகம், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி கிழக்கு ஆகிய காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 270 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் ரூபாய் 38,000/- மதிப்பிலான 1,624 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.