இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முனியசாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது வங்காருபுரம் நோக்கி வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில் ஆட்டோவில் வந்த அப்துல் ரஹீம் மற்றும் முகமது பரூக் ஆகிய இருவரும் சுமார் 40 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் நிலையம் வரவழைத்த சார்பு ஆய்வாளர், அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.