திருவாரூர் : தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக காரைக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் 175 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு மேற்படி நபரை கைது செய்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் வீரராகவன் தனிப்பிரிவு சிறப்பு ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம். எஸ். சி அக்ரி அவர்கள் பாராட்டினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்