சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, மயிலாப்பூர் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 09.06.2021 அன்று இரவு மயிலாப்பூர், பல்லக்கு மாநகர், AE பிளாக், எண்.39 என்ற வீட்டை சோதனை செய்தபோது,
அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 1.செந்தில், (வ/39) மயிலாப்பூர் 2.சுபாஷ் கார்த்திக், (வ/32), ஆழ்வார்பேட்டை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ எடை கொண்ட மாவா புகையிலை பொருட்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.