திருப்பூர் : திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் நேற்று மாலை 4.20 மணி அளவில் அங்குள்ள தனியார் நகை அடகு கடைக்கு ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி 81 கிராம் நகையும் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றார் இதனையடுத்து நகை அடகு கடையின் மேலாளர் தங்கராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வடக்குகுற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.தங்கவேல் மற்றும் காவலர்கள் குற்றவாளியைத் குற்றம் நடந்த நான்கு மணி நேரத்தில் கண்டுபிடித்து நகையும் ரொக்கப் பணத்தையும் மீட்டனர்.வெகு விரைவாக குற்றவாளியை கண்டுபிடித்த வடக்கு குற்றப்பிரிவு காவலர்களை மாநகர காவல் ஆணையர் உயர் திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் காவல் துணை ஆணையர் உயர் திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்.