திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை கொரோனா தொற்று இரண்டாம அலை மிக வோகமாக பரவும் காரணாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அ.கயல்விழி.ஐ பி எஸ். அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொடுக்க மாவட்ட காவல் அலுவலகம் முன்பு “”புகார்பெட்டி”” அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதற்கென சிறப்பு உதவி ஆய்வாளர் ஒரு தனிப்பிரிவு காவலர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது மாவட்ட காவல் அலுவலகம் வருகைதரும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை புகார் பெட்டியில் போட்டு செல்லலாம் அத்தகைய மனுக்கள் நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன் விபரம் மனுதாரரின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் அதனால் மனுதாரர்கள் கோரிக்கை மனுவில் தங்களது அலைபேசி எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறதுஇ