சென்னை : சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் 12.00 மணி முதல் 01.00 வரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண் மூலம் தொடர்பு கொண்டு காவல் ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் ஏற்கனவே தொடங்கி வைத்தார்.
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை
இதன் தொடர்ச்சியாக, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திங்கட்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களிடம் பொதுமக்கள் மேற்கண்ட கட்செவி (WhatsApp) எண் மூலம் காணொளியில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இன்றைய புகாரில் காசோலை மோசடி, சொத்து பிரச்சனை, பணம் ஏமாற்றுதல், குடும்ப பிரச்சனை, இ-பாஸ், அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனை போன்ற புகார்கள் இருந்தன. மேற்படி புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை












