பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. மேலும் பிரச்சனையில் உள்ள பெண்கள், பெண்கள் உதவி மையத்தினை எளிதாக தொடர்பு கொள்ள இலவச தொலைப்பேசி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 22.07.2021-ம் தேதி குன்னம் கிராமத்திலிருந்து மலர்விழி என்ற பெண் 181 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரினை பதிவு செய்தார்.
இதனை பெற்றுக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மேற்படி பெண்ணை தொடர்பு கொண்டு அவர்களது விசாரித்தபோது அந்த பெண் கூறியதாவது.
எனது கணவர் எனது குழந்தைகளை என்னிடம் தர மறுப்பதாகவும் எனது குழந்தைகளை பெற்று தருமாறும் கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட காவல் ஆய்வாளர் உடனடியாக அவரது கணவரிடமிருந்து குழந்தையை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பெண் தனது குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை அறிந்து துரிதமாக செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் அவரது குழுவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை