கோவை: காவல்துறையினர் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வந்தாலும் காவல்துறையில் பணிபுரியும் அநேக காவலர்கள் மனிதாபிமானத்திற்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் கோவை பீளமேடு காவல் ஆய்வாளர் திரு.ஜோதி செய்த உதவி அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
என்னும் திருக்குறலுக்கு ஏற்ப, மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப்படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
தனது மகளுக்கு பிரசவம் பார்க்க பண உதவி கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம் பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜோதி அவர்கள் ரூபாய் 10 ஆயிரம் கொடுத்து உதவி செய்தார். தற்போது குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்கள். இந்நிலையில் தாயும் சேயுமாக நன்றி கூறுவதற்காக காவல் நிலையம் வந்து காவல் ஆய்வாளர் திரு.ஜோதி அவர்களிடம் கடைசி நேரத்தில் செய்த பேர் உதவிக்கு கண்ணீருடன் நன்றி கூறி சென்றார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்