திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ராமு(43). என்பவர் திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு காட்டுமடம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த உதயா (எ) உதயகுமார் தான் பெரிய ரவுடி, தன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. என்றும் உடைந்த பீர் பாட்டிலை ராமுவின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்ததாக ராமு தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு எப்படி சம்பவத்தில் ஈடுபட்ட உதயாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா