தஞ்சாவூர்: கடந்த (12.11.24) ஆம் தேதி பட்டீஸ்வரம் காவல் நிலைய சரகம், மாத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் குடியிருக்கும் தர்மராஜ் என்பவரது வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் தாங்கள் மாநகராட்சியில் இருந்து வருவதாகவும், மோடி திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி அமைத்து தருவதாகவும் அதற்கு மாடியில் தண்ணீர் தொட்டி வைக்கும் இடத்தை அளக்க வேண்டும் என்று கூறியதை நம்பி புகார்தாரர் மாடிக்கு சென்றபோது, மூன்றாவது நபர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி கொண்டு சென்றுள்ளார்.
மேற்படி குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.ஆசிஷ்ராவத் IPS அவர்களின் உத்தரவுபடி, கும்பகோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் TPS அவர்களின் மேற்பார்வையில், தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரேகாராணி, பட்டீஸ்வரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
திரு.ராஜேஷ்கண்ணா, கும்பகோணம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர்
திரு.கீர்த்திவாசன் தலைமையிலான காவலர்கள் SSI செல்வகுமார்SSI கதீஸ்SSI ரமேஷ்
HC சுரேஷ்(CDR)HC பாலசுப்ரமணியன் GrI ஜனார்த்தனன் PC முருகராஜ் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், பல கட்ட விசாரணைக்கு பிறகு, வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் வீரபத்திரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து சுமார் 16.5 சவரன்(132 கிராம்) தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேற்படி வீரபத்திரன் என்ற குற்றவாளியை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்