பாண்டிச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் வென்ற பெண் காவலர் மற்றும் மேலும் ஒரு விளையாட்டு பெண் வீரரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், நேரில் அழைத்து பாராட்டினார். V. சசிகலா (25). த/பெ வீரபத்திரன், காரைக்கால் இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2023 ஆண்டில் பணிக்குச் சேர்ந்து தற்போது திருச்சி நாவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில்,பயிற்சி காவலராக உள்ளார். இவர் சிறு வயதிலிருந்து பீச் வாலிபால் போட்டியில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் தற்போது காவல்துறையில் பணிக்கு சேர்ந்தும் துறை ரீதியில் சிறப்பு அனுமதி பெற்று தன்னுடன் கனிமொழி (22). த /பெ லட்சுமணன் , காரைக்கால், என்ற பெண் விளையாட்டு வீரரையும் இணைத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டில் இவர் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணிக்காக ஐந்தாம் இடத்தைப் பெற்று தந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பெண் காவலர் சசிகலா கூறுகையில் என் மீது நம்பிக்கை வைத்து பீச் வாலிபால் போட்டியில் பங்குபெற சிறப்பு அனுமதி வழங்க அனுமதி தந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.