கோவை: கோவை, செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தர்மசீலன் தலைமையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். செல்வபுரம் ஜங்சன் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த அரசியல் கட்சி பளக்ஸ் பேனர்களை இரண்டு நபர்கள் கிழித்துக் கொண்டு இருப்பதை பார்த்து அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் இருவரும் போலீசாரிடம் தகராறு செய்ததோடு எஸ்ஐ தர்ம சீலனை கைகளால் தாக்கினர். இதையடுத்து அந்த இரண்டு பேரை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவரின் மகன் நசீர் (37) அப்துல் நாசர் (38) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்