அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் சரகம் ஏலாக்குறிச்சியில் இயங்கிவரும் அன்னை காப்பகத்திற்கு எதிரே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று அழும் சத்தத்தைக் கேட்டு, காப்பகத்தினர் வெளியே சென்று பார்த்தபோது பெண் சிசு ஒன்று அனாதையாக கிடப்பதை பார்த்தனர். இதனை அறிந்த திருமானூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு திருமானூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்செய்தியை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அப்பெண் சிசுவை அன்னை காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தைக்கு தேவையான துணி உள்ளிட்ட குழந்தை பொருட்களை வழங்கினார்.