பெரம்பலூர்: ஆத்தூர் சாலையில் உள்ள தீபக் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் சாலையில் உள்ள டீக்கடையில் பிராந்தி பாட்டிகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பெரம்பலூர் எஸ்ஐ மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சோதனையிட்டபோது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில்வர்கப் என்ற பிராந்தி பாட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் சுந்தரராஜனை கைது செய்தனர்.இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து சுந்தரராஜனை பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.