திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனை காக்கும் பொருட்டு திருவள்ளூர் பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் பிரஸ் கிளப் கௌரவத் தலைவர் கே.ரவிச்சந்திரன் ஆலோசனையின் அடிப்படையில் திருவள்ளூர் பிரஸ் கிளப் தலைவர் பிரபு முனுசாமி தலைமையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூபாய் 10 லட்சம் காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் லோகநாதன் பொருளாளர் வசந்தகுமார் துணைத்தலைவர் சுரேஷ்பாபு மகேஷ்குமார் இணைச்செயலாளர் யுகந்தர் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விநாயகமூர்த்தி மாறன் ஒருங்கிணைப்பு குழு குமரேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற காப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில் முதல் கட்டமாக சங்கத்தில் 47 உறுப்பினர்களுக்கு ரூபாய் 10 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டதுடன் இந்திய தபால் நிலையத்தின் சேமிப்பு கணக்கும் தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் பிரஸ் கிளப் உறுப்பினர்களை மழைக்காலத்தில் பாதுகாக்கும் வகையில் ரெயின் கோட் வழங்கப்பட்ட நிலையில் தீபாவளி மற்றும் பொங்கல் திருநாளை அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் திருவள்ளூர் பிரஸ் கிளப் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் தற்பொழுது அவர்களை பாதுகாக்க 10லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பத்திரிகையாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் திருவள்ளூர் பிரஸ் கிளப் தலைவர் பிரபு முனுசாமி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2022/06/image_2022-06-20_082248181-209x300.png)
திரு. பாபு