சிவகங்கை : உலக இருதய தினத்தை முன்னிட்டு காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பாக மிக பிரமாண்ட மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு (16) வயது முதல் (25) வயதினரும் (26) முதல் (49) வயது வரையும் 50 வயதினருக்கு மேல் என மூன்று பிரிவுகளும் பெண்களுக்கான பிரிவில் (16) வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.பிரிவினருக்கான மாரத்தானை அருள் தந்தை ஜான் வசந்த குமார் இமுதல்வர் ஆனந்தா கல்லூரி தேவகோட்டை அவர்களும் (50) வயதுக்கு மேற்பட்டோர் பிரிவினருக்கான மாரத்தானை திரு. அப்துல் ரஹுமான் ஐக்கிய கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் அவர்களும் பெண்களுக்கான பிரிவை முனைவர் பெத்தாலெட்சுமி, முதல்வர், அழகப்பா அரசு கலை கல்லூரி அவர்களும் கொடியசைத்து துவங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின், அவர்களும் பங்கேற்று வெற்றிகரமாக இலக்கை அடைந்தது இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இருதய பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வெற்றியிலக்கினை முதல் (25) வயதினருக்கான அடைந்தனர். இதில் (16) வயது ஆண்களுக்கான பிரிவில் திரு. வேல்முருகன் முதலிடத்தையும் திரு. பிரகாஷ் இரண்டாமிடத்தையும் திரு. சுகுமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 26 வயது முதல் 49 வயதினருக்கான ஆண்களுக்கான பிரிவில் திரு. விக்டர் என்பவர் மூன்றாமிடத்தையும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் திரு. நஞ்சுவாணன், திரு.தண்டாயுதபாணி, முதலிடத்தையும் இரண்டாமிடத்தையும் திரு. முருகன், மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில் செல்வி. காஷ்மிகா, முதலிடத்தையும் செல்வி. வினிதா, இரண்டாவது இடத்தையும் செல்வி.லாவண்யா, மூன்றாவது இடத்தையும் பெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முனைவர் ரவி துணை வேந்தர் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அவர்கள் பரிசு பதக்கங்கள் மற்றும் சான்றுகள் வழங்கி கவுரவித்தார். வெற்றிபெற்றவர்களுக்கு சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் காரைக்குடி கே.ம்.சி மருத்துவமனையின் துணை செயல் இயக்குநர் டாக்டர். காமாட்சி சந்திரன் அவர்கள் இருதய விழிப்பிணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இம்மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு கணேஷ் குமார் துணை காவல் கண்காணிப்பாளர் தேவகோட்டை திரு ஆத்மநாதன், துணை காவல்கண்காணிப்பாளர், திருப்பத்தூர், துணை வேந்தர் கர்னல்.ரஜினி பிரதாப் ,NCC பட்டாலியன், காரைக்குடி, திரு.லயன்ஸ் கண்ணப்பன், திரு.ஸ்ரீனிவாசன் NSS ஒருங்கிணைப்பாளர்,அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி