கோவை: கோவை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின்பேரில் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் திருமதி.உமா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தநாகேந்திரன் மகன் விஜய் 24 ஆர்.எஸ். புரம் மீனாட்சி நகர் ராஜா மகன் மணிகண்டன் 19 ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 27 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.