தஞ்சை : தஞ்சை மாவட்டம் பகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ள தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் குமார் உதவி ஆய்வாளர் திரு முத்துக்குமார் தலைமை காவலர் பிரபு மற்றும் காவலர்கள் விஜயகுமார் சந்தோஷ் பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பும் , வாகனச் சோதனைகளும் மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயில் பகுதியை சேர்ந்த ரவி மகனான தமிழரசன் என்கின்ற ஜெகன் என்கின்ற குரங்கு ஜெகன் (30). பல கொலை ,கொள்ளை, ,ஆட்கடத்தல் என பல வழக்குகளில் தேடபட்டு வரும் பிரபல ரவுடியான இவர் திருச்சி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று (17-8-2023) இரவு திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் ஜெகனை கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட தமிழரசன் என்கின்ற ஜெகன் என்கின்ற குரங்கு ஜெகன் பொறியியல் படித்த பட்டதாரி ஆவார்.
இவர் மீது கொலை ,கொள்ளை கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி மற்றும் ஆட்கடத்தல் போன்ற வழக்குகள் படிக்கும் காலத்தில் இருந்தே நிலுவையில் இருந்து வருகின்றன , மேலும் அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில், திருவிடை மருதூர், திருநீலக்குடி, கும்பகோணம் தாலுகா, சுவாமிமலை, கும்பகோணம் மேற்கு மற்றும் கிழக்கு, மற்றும் அம்மாபேட்டை ஆகிய காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அகல்யாநல்லூர் என்னும் பகுதியில் பிரபல ரவுடியான செல்வகுமார் என்கின்ற சடையமங்கள் செல்வகுமார் என்பவருடன் சேர்ந்து ராஜ்மோகன் என்பவரை காரில் வைத்து கடத்திச் சென்று வெட்டிக் கொன்று விட்டு மீண்டும் தப்பிச் சென்று விட்டார்.
இப்படி பல வழக்குகளில் சம்பந்தப் பட்ட இவர் கடந்த ஓராண்டாக கைது நடவடிக்கைக்கு பயந்து வட மாநிலங்கலான ஹரித்துவார், உத்திரபிரதேஷ், சட்டீஸ்கர் ,ராய்ப்பூர், ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து ஆர்டரின் பேரில் உணவு பட்டுவாட செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் கூட்டாளியான காதரை சந்திக்க ஜெகன் திருச்சி வருவதாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி பூரணி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அவர்களின் மேற்பார்வையில் (17-8-2023 ) இரவு ரவுடி ஜெகனை திருச்சி ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார் அவரை அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து இன்று (18-8-2023 ) காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதியரசர் உத்தரவின் பேரில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்