வேலூர்: வேலூர் -காட்பாடி சாலையில்கடந்த 15-ந் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார். உள்ளே புகுந்த மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமூடி, தலையில் விக் அணிந்திருந்தார்.
8 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை:
விசாரணையில் கட்டிட தொழிலாளி நகைக்கடையில் கொள்ளையடித்தது பள்ளிகொண்டா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன் 23. என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று போலீசார் நகை புதைத்து வைக்கப்பட்டிருந்த சுடுகாட்டு பகுதிக்கு டீக்காராமனை அழைத்துச் சென்று. நகைகளை புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார்.
ஒரு இடத்தில் சுமார் 10 கிலோ நகைகள் பிளாஸ்டிக் பையில் இருந்தது. மற்றொரு இடத்தில் சுமார் 6 கிலோ நகைகளும் இருந்தன. பின்னர் அவற்றை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றனர்.