கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் திருமதி.உமா மேற்பார்வையில் மேற்குப்பகுதி உதவி போலீஸ் கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் திரு..நாகராஜ் , ஏட்டுகள் திரு..வைத்தியநாதன், திரு.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.அனிதா முதல் நிலை காவலர் திரு.கஜேந்திரன் போலீஸ்காரர் திரு.சாகுல்ஹமீது ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் அந்த கொள்ளைக் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக தடாகம்ரோடு கே.என்.ஜி புதூரை சேர்ந்த விஜய் ( வயது 28) இடையர்பாளையம் சூரியகுமார் 24 வேலாண்டிபாளையம் யுவராஜ் 23 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 5 கார்கள் ,5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் விஜய், யுவராஜ் ஆகியோர் டிரைவர்களாகவும், சூரியகுமார் டூவீலர் மெக்கானிக்காவும்வேலை பார்த்து வந்தனர்.
இவைகளின் மொத்த மதிப்பு.ரூ 15 லட்சம் இருக்கும்.கொள்ளைக் கும்பலை கைதுசெய்து வாகனங்களை மீட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் பாராட்டினார்.