கோவை: கோவை இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக் 33 இவரது வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர்.
கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த மணிகண்டன் 22 என்பவரை நேற்று கைது செய்தனர் .இவனிடமிருந்து பைக் மீட்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்