கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சோம சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர் ரதீஷ் மற்றும் போலீசார் இடம்பெற்றனர்.
இவர்கள் நேற்று கல்வீரம்பாளையம் பகுதியில் ஒரு இடத்தில் சந்தேகப்படும்படி பதுங்கியிருந்த ஒரு ஆசாமி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் பாஸ்கர் எந்த கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவன் கைது செய்யப்பட்டான்.
விசாரணையில் இவன் திருச்சி ,மதுரை, கோவை, திண்டுக்கல் ,சென்னை, ஆயிரங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்பு உடைய பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது.
இவனிடமிருந்து திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான், பிரபல கொள்ளையனை கைது செய்த இன்ஸ்பெக்டர் சாஸ்தா மற்றும் தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பாராட்டினார்.