கோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் சுஜாதா இ சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. .இவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நபரை தீவிரமாக தேடிவந்தனர். திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் மதுரை தெற்குவாசல் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சென்று அவனை மடக்கி பிடித்தனர். அவர் கோவைக்கு கொண்டு வரப் பட்டான். விசாரணையில் அவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஜெயின் (வயது 36) என்பதும் தெரியவந்ததுஇ இவன் கோவை இமதுரை .சேலம்இ தேவகோட்டைஇ உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவன் கொள்ளை அடிக்கும் பணத்தை வைத்து 10 நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டுஇ அந்த பணம் செலவழிந்ததும் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தான். இவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் .இன்றுஇ அடைக்கப்பட்டான்’