கோவை: தமிழகத்தையே அதிரவைத்த ஆள்மாறாட்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, அவர்களுக்கு 2 ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது. கோவையில் வசித்து வந்த வழக்கறிஞர் ராஜவேல் என்பவர் மோசடி வழக்கில் இருந்து, தனது மனைவியை காப்பாற்ற, அவர் இறந்துவிட்டதாக நாடகமாடினார்.
உயிரிழந்த மாணவியின் சடலத்தை போல் அமாவாசை என்ற அப்பாவி பெண்ணை, கொலை செய்து உடலை வைத்து ஊரை ஏமாற்றி உள்ளார். அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு முதலில் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதற்கிடையேஅம்மாவாசை என்ற பெண்ணை காணவில்லை என்ற தேடுதலின் போது தான், குறிப்பிட்ட கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதற்கிடையே அமாவாசையை கொன்று எரித்து, அந்த உடலை வைத்து தனது மனைவி பெயரில் இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார். இந்த வழக்கு பின்னணியில் இருந்த மர்மங்களை கண்டறிந்த போலீசார் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, இரண்டு தினங்களுக்கு முன் வெளியான நிலையில் தண்டனை பெற்று தந்தனர்.
சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் குழுவினருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் ஐபிஎஸ் பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்