கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகன் என்ற சொரி பாலன்.இவன் மீது கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவன் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததால் இவனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.செல்வநாகரத்தினம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சமீரன் கஞ்சா வியாபாரி பாலமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து கஞ்சா வியாபாரி பாலமுருகன் இன்று குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.