கோவை: கோவை பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சௌரிபாளையத்தை சேர்ந்த விக்ரம் என்பவரை அந்த பியூட்டி பார்லருக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இதை நடத்தி வந்த சென்னை அரக்கோணம் அஸ்வின் சர்மா 21 கைது செய்யப்பட்டார் ..அங்கிருந்த மசாஜ் அழகி மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்














