மதுரை மாவட்டம், மாடக்குளம் தானதவம்புதூர் சேர்ந்த கருப்பையா 61, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 17.04.2023-ம் தேதி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 08/2023 பிரிவு 354,506(ii) IPC & 4 of TNPHW Act-ன் படி குற்றவாளி கடந்த 17.04.2023-ன் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேற்படி குற்றவாளியை வாடிப்பட்டி நீதித்துறை நடுவர் மன்றம் பிணையில் விடுவித்து ஆணை பிறப்பித்தது.
மேற்படி குற்றவாளி பிணையத்தில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேற்படி வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் மூலம் பிணை முறிவு கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முறையீடு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 22.08.2023-ம் தேதி மேற்படி குற்றவாளிக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணையினை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்