இராமநாதபுரம் : தலைசிறந்த பாலிவுட் நடிகர் திரு.ஆமீர் கான் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.வருண் குமார், இ.கா.ப., அவர்களும் சந்தித்து பேசினார்கள். அப்போது நடிகர் திரு.ஆமீர் கான், இராமநாதபுரம் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். நாம் அனைவருக்கும் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை, ஒருமுறை தான். அத்தகைய உன்னதமான வாழ்க்கையை ஒருவருக்கொருவர் அன்புடன் இருந்து , குற்றம் அற்ற வாழ்வை அனைத்து இளைஞர்களும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் பற்றிய தகவல்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண் “9489919722” என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்