சேலம் : சேலம் ஏற்காடு காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (44) அல்லி முத்து கிளியூர் வண்டி கடை மற்றும் சிவசுப்பிரமணியம் (57) வண்ணம்பட்டி குள்ளனூர் தர்மபுரி மாவட்டம் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 03/01/2019 ஆம் தேதி அதே பகுதியில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் அத்துமீறி உள்ளேன் நுழைந்து மாணபங்கப்படுத்திய குற்றத்திற்காக ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்து இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து, சேலம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது இதில் குற்றவாளி ஸ்ரீராம் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் வழக்கை பிரித்து நடத்தி வந்த நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு (22/12/2022)-ம் தேதி குற்றவாளி சிவசுப்பிரமணியம் என்பவருக்கு நீதிபதி திருமதி கலைமதி அவர்கள் ஒரு ஆண்டு 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்