பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.ப குற்றவாளிகள் இருவரையும் இன்று (21.07.20) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.