சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் வீரகனூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த அறிவழகன் (24), அம்பேத்கர் நகர் வீரகனூர் ஓட்டுனர் என்பவர் அதே பகுதி சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் (13) வயது சிறுமியை (04/07/2019), ஆம் தேதி தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த குற்றவாளி சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்டப்படி 363, 366 ஐபிசி போக்சோ 2012ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது அரசு வழக்கறிஞர் திருமதி. சுதா அவர்கள், சிறப்பாக வாதாடி சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி அறிவழகன் (24), மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறுமையை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக (13/3/2023), ஆம் தேதி நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 6000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்