செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனநல வளர்ச்சியற்ற 14 வயது சிறுமியை கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த எல்லன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி(எ)ராஜமாணிக்கம் (70), என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதனைத் அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் போக்சோவில் கைது. செய்யப்பட்டார். அதன் பிறகு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிக்கு மூன்று பிரிவுகளில் 29 ஆண்டுகள் ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.