காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 ) ஜெபநேசன் ( எ ) சார்லஸ் 29 , 2 ) குணசேகரன் 24. 3 ) குணசீலன்( 23 , 4 ) அஜித்குமார் 23 , மற்றும் 5 ) காமு ( எ ) காமராஜ் 23 ஆகியோர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரம்யா ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்பருக்கு உதவி செய்வதாகக்கூறி நம்பவைத்து, பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கதிர்பூர் கிராமத்தில் உள்ள
கழனிவெளிக்கு 01.09.2021 அன்று அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக பீர் குடிக்க வைத்து மேற்படி குற்றவாளிகள் 5 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (09.09.2021 ) கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்
1 ) ஜெபனேசன், 2 ) குணசேகரன், 3 ) குணசீலன், மற்றும் 4 ) அஜீத் ஆகியோர் ( 09.09.2021 l அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான காமு ( எ ) காமராஜை விரைவில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் உதவி ஆய்வாளர்கள்
திரு.சிவக்குமார் மற்றும் திரு.முரளி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் இன்று (10.09.2021 ) தலைமறைவாக இருந்த காமு ( எ ) காமராஜை கைது செய்து .
அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் ( Maruti Swift TN 21 BM 4718 ) கைப்பற்றப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரிந்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்த தனிப்படையினர் அனைவரையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்