காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபநேசன் ( எ ) சார்லஸ் 29 ,குணசேகரன் 24 , குணசீலன் 23 , அஜித்குமார்23 , மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரம்யா ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்பவருக்கு உதவி செய்வதாக கூறி நம்ப வைத்து பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கதிர்பூர் கிராமத்தில் உள்ள கழனிவெளிக்கு 01.09.21 அன்று அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக பீர் குடிக்க வைத்து மேற்படி குற்றவாளிகள் 5 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்று (09.09.21 ) கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இவ்வழக்கின் சம்பவயிடத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சுதாகர் அவர்கள் பார்வையிட்டு காஞ்சிபுரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.முருகன் மற்றும் பாலுச்செட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தடயங்களை சேகரிக்க தகுந்த ஆலோசனை வழங்கியதுடன், இச்சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன், திரு.சிவக்குமார், திரு.சுந்தரராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.சிவக்குமார், திரு.முரளி மற்றும் திரு.நித்தியானந்தம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்த 24 மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் 1) ஜெபனேசன் , 2 ) குணசேகரன் , 3) குணசீலன் , மற்றும் 4 ) அஜீத் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்களுக்கு எதிராக எவரேனும் எவ்வகையிலும் தகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதேபோல் பெண்களும் தங்களுக்கு அறிமுகமற்ற ஆண்களிடம் பழகும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்