சென்னை : சென்னை பள்ளிகரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹோட்டல் மேனஜ்மென்ட் 3ம் ஆண்டு படித்து வரும் இரு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் என்பவர் மீது கடந்த 6ம் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் மாணவிகள் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பல மணி நேரமாக மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தகவல் அறிந்த பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் கலையும்படியும், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் கூறியதால் மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து பேராசிரியர் ஆபிரகாம் அலெக்சை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பாலியல் வன்புணர்வு தூண்டும் வகையில் மாணவிகளிடம் கல்லூரி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் நடந்து கொண்டதாக தெரியவந்ததாக கூறிய பள்ளிகாரணை போலீசார் ஆபிரகாம் அலெக்ஸ் மீது 354(!)(!!), r/w இரு பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்சை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை