சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, 9.6.2021 அன்று, J9 துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பெருங்குடி, பஞ்சாயத்து மெயின் ரோடு, என்ற இடத்தில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்து, பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 1. அஜித் (எ) அஜித்குமார்,( வ/24), பாலக்காடு, கேரள மாநிலம் 2.கேபிரியல், (வ/25), சிக்கிம், மிசோராம் மாநிலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 4 ஏ.டி.எம் கார்டு ஸ்வைப்பிங் மெஷின்கள், 1 டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் கைப்பற்றப்பட்டது. மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.